மதுரை: தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கான நிதியை குறைத்த ஒன்றிய அரசுக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஒன்றிய பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு ரூ.2,532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அதே சமயம் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து ரூ.147.56 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இதுதான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post செம்மொழிகளுக்கு நிதி குறைப்பு மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம் appeared first on Dinakaran.
