×

செம்மொழிகள் புறக்கணிப்பு ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: 2014-15 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ரூ.147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம்.

ஆனால் மற்ற ஐந்து செம்மொழிகளுக்கு சராசரி ஆண்டு நிதி ரூ.13.41 கோடி மட்டுமே ஒன்றிய பாஜ அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே.

The post செம்மொழிகள் புறக்கணிப்பு ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Union government ,Chennai ,Humanist People's Party ,M.H. Jawahirullah ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...