சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியாகிறது. இந்த பட்டியலில் இடம் பெறாத மாணவ மாணவியரின் விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மறு கூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The post பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது appeared first on Dinakaran.
