×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் ஸ்வியாடெக்: டியாஃபோ முன்னேற்றம்

சின்சினாட்டி: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு நேரடியாக களமிறங்கினார் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்(23வயது, 1வது ரேங்க்). அவரை பிரான்ஸ் வீராங்கனை வர்வாரா கிரச்சோவா(24வயது, 69வது ரேங்க்) எதிர்த்து விளையாடினார். நெம்பர் ஒன் வீராங்கனைக்கு உரிய வேகத்துடன் விளையாடிய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-0 என எளிதில் தனதாக்கினார். ஆனாலும் கிரச்சோவா தளராமல் போராடியதால் 2வது செட் டைபிரேக்கர் வரை நீண்டது. அதை கிரேச்சோவா 7-6(10-8) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

ஆனால் 3செட்டில் சமாளித்து விளாயடிய ஸ்வியாடெக் அதை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் தனதாக்கினார். எனவே 2மணி 11நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற செட்களில் வென்ற ஸ்வியாடெக் காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றில் விளையாட உள்ளார். அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி(34வயது, 84வது ரேங்க்), உக்ரைனின் அன்ஹிலினா கலினினா(27வயது, 52வது ரேங்க்) உடன் மோதினார். ஒரு மணி 25நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தை 6-2, 6-4 எனநேர் ெசட்களில் வென்ற வோஸ்னியாகி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

முன்னேறிய டியாஃபோ
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாஃபோ(26வயது, 27வது ரேங்க்), இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி(22வயது, 18வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.முன்னணி வீரர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீரர் என்பதால் முசெட்டி எளிதில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதிரடியாக விளையாடிய டியாஃபோ 6-3, 6-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 7நிமிடங்கள் நடந்தது. காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா(22வயது, 35வது ரேங்க்) உடன் டியாஃபோ விளையாட உள்ளார்.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் ஸ்வியாடெக்: டியாஃபோ முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Cincinnati Open Tennis ,Swiatek ,Diafo ,CINCINNATI ,CINCINNATI OPEN TENNIS TOURNAMENT ,OHIO, USA ,Singles Division ,Ika Svyatech ,Varvara Crachova ,Dinakaran ,
× RELATED சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சபலெங்கா சாம்பியன்