×

மேலும் ஒரு சிவிங்கி புலி பலி

போபால்: மத்தியபிரதேசம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட ஆண் சிவிங்கி புலி நேற்று உயிரிழந்தது. இந்தியாவில் அழிந்து விட்ட உயிரினமான சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தென்ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகளும், தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும் இந்தியா கொண்டு வரப்பட்டன. இவை மத்தியபிரதேசம் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தன. இதில் ‘சாஷா’ என்ற பெண் சிவிங்கி புலி கடந்த மார்ச் மாதமும், ‘உதய்’ என்ற ஆண் சிவிங்கி புலி ஏப்ரல் மாதமும், ‘தக்க்ஷா’ என்று பெயரிடப்பட்ட பெண் சிவிங்கி புலி மே மாதமும் உயிரிழந்தன.

இதேபோல், ‘ஜுவாலா’ என்ற பெண் புலி ஈன்ற நான்கு குட்டிகளில் 3 உயிரிழந்தன. இருதினங்களுக்கு முன் ‘தேஜாஸ்’ என்ற ஆண் சிவிங்கி புலி உடல்நலக் குறைவால் பலியானது. இந்நிலையில் ‘சூரஜ்’ என்ற ஆண் சிவிங்கி புலி நேற்று காலை உயிரிழந்தது. இதனால் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கி புலிகளின் பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. அழிந்து போன இனமான சிவிங்கி புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்ட நிலையில் தொடர்ந்து அவை உயிரிழந்து வருவது வனவிலங்கு ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

The post மேலும் ஒரு சிவிங்கி புலி பலி appeared first on Dinakaran.

Tags : Kuno National Park, Madhea Pradesh ,India ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை