×

சீனாவின் முன்னாள் துணை நிதியமைச்சர் ஏஐஐபியின் தலைவராக நியமனம்

பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் துணை நிதியமைச்சர் ஜூ ஜியாய் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியாவில் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி(ஏஐஐபி) செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியின் கவர்னர்கள் குழுவின் 10வது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. வங்கியின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி 26.54 சதவீத வாக்குப் பங்குகளுடன் சீனா வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.

இந்தியா 7.58 சதவீதத்துடன் இரண்டாவது பெரிய பங்குதாரராகவும் இதனை தொடர்ந்து 5.9சதவீதத்துடன் ரஷ்யாவும், 4.1 சதவீதத்துடன் ஜெர்மனியும் இடம்பிடித்துள்ளன. இந்த கூட்டத்தில் வங்கியின் நிறுவனத் தலைவர் ஜின் லிகுனுக்கு பிறகு, சீனாவின் முன்னாள் துணை நிதியமைச்சரான ஜூ ஜூயாய் வங்கியின் அடுத்த தலைவராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீனாவின் முன்னாள் துணை நிதியமைச்சர் ஏஐஐபியின் தலைவராக நியமனம் appeared first on Dinakaran.

Tags : China ,vice finance minister ,AIIB ,Beijing ,Zhu Jiayi ,Asian Infrastructure Investment Bank ,Asia ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்