×

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. போலீசாரின் விசாரணைக்கு ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு அளித்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின் ஏடிஜிபி ஜெயராம் தனது சொந்த காரில் ஏறிச் சென்றார்.

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை அடுத்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், ஏடிஜிபி ஜெயராம் தனது சொந்த காரில் ஏறிச் சென்றார்.

ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஏடிஜிபி ஜெயராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏடிஜிபி ஜெயராம் அனுப்பிவைக்க்ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Tags : ADGB Jayaramid ,Chennai ,ATGB ,Jayaramid ,Jayaram ,ATGB Jayaram ,Dinakaran ,
× RELATED தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி