×

வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை : வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் தலைவர்கள் பலரும் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

பிறந்தார் – நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,

தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!
தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!
வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!

முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!

இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி – தமிழினத்தின் எழுச்சி – தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்!

கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்!

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்