×

புலிகளின் இருப்பிடத்தை பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: புலிகளின் இருப்பிடத்தை பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் புலிகளின் இருப்பிடத்தை பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுல அவர்; சர்வதேச புலிகள் தினத்தில், புலிகளின் பாதுகாப்பிற்காக கர்ஜிப்போம்; அழிந்து வரும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளை அளித்துள்ளது; 2018ல் 264ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2022ல் 306ஆக அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து புலிகளின் இருப்பிடத்தை பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம் என தெரிவித்துள்ளார்.

The post புலிகளின் இருப்பிடத்தை பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : CM. G.K. Stalin ,Chennai ,Tigers ,CM ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு...