×

2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற ஆண்டுக்கு 80 லட்சம் வேலை உருவாக்க வேண்டும்: தலைமை பொருளாதார ஆலோசகர் பேச்சு

நியூயார்க்: அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த கொலம்பியா இந்தியா உச்சி மாநாடு 2025ல் ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசும்போது, ‘‘வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை அடைய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டும்.

இந்த மிகப்பெரிய, சிக்கலான சவாலை இந்தியா வழிநடத்த வேண்டும். இது எளிதாக இருக்காது. நாம் உருவாக்க வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 80 லட்சம். தொடக்க நிலை வேலைகளை அகற்றுவதில் செயற்கை நுண்ணறிவு பெரிய பங்கைக் கொண்டிருக்கலாம். ஐடி துறையில் உள்ள சேவை வேலைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம்’’ என்றார்.

The post 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற ஆண்டுக்கு 80 லட்சம் வேலை உருவாக்க வேண்டும்: தலைமை பொருளாதார ஆலோசகர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Chief Economic Advisor ,New York ,Columbia India Summit 2025 ,Columbia University ,United States ,Union Government ,Anantha Nageswaran ,Dinakaran ,
× RELATED சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2...