×

தலைமை செயலாளர் உத்தரவு எதிரொலி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களில் திருக்குறள் பலகை வைப்பு

விழுப்புரம் : தலைமை செயலாளர் உத்தரவு எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் திருக்குறள் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தினமும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கட்டாயம் எழுதி வைக்க வேண்டும். தமிழ்கலை சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

அதில், தமிழ் கலை சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமை செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சி சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ் சொல்லுடன் 4×3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகையில் நாள்தோறும் எழுதி வைக்குமாறு அனைத்து துறை கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், துறை தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆகியோர்களை கேட்டு கொள்ளலாம்.

மேற்படி பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து உரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்புமாறு தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர், மாவட்ட நிலை அலுவலர்களை கேட்டுக்கொண்டிருந்தார். தலைமை செயலாளர் உத்தரவை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், பிற மாவட்ட துறை அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் திருக்குறள் பலகை வைக்கப்பட்டு தினமும் ஒரு குறள், அதற்கான பொருள்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

 

The post தலைமை செயலாளர் உத்தரவு எதிரொலி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களில் திருக்குறள் பலகை வைப்பு appeared first on Dinakaran.

Tags : chief secretary ,Thirukkural board ,Villupuram district ,Villupuram ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக...