×

சென்னை மாநகராட்சியில் மேம்பாலம், சாலை மேம்பாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை விரிவுபடுத்துவது, புதிய மேம்பாலங்களை அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் வாலாஜா சாலை போக்குவரத்து சந்திப்பு முதல் கலங்கரைவிளக்கம் வரையிலும், புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச். சாலையில் இருந்து பெரியார் சாலை வரையிலும், சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் அண்ணா சாலை சந்திப்பு வரையிலும், காந்தி மண்டபம் சாலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரையிலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரையிலும், கிரீன்வேஸ் சாலையில் போர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க. பாலம் வரையிலும் உள்ள பேருந்து போக்குவரத்து சாலைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இத்திட்டங்களுக்கான சாத்திய கூறுகளை ஆராய்வது குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

The post சென்னை மாநகராட்சியில் மேம்பாலம், சாலை மேம்பாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,Deputy Chief Minister ,Flyover and Road Development ,Chennai Corporation ,CHENNAI ,Udayanidhi Stalin ,Chennai Corporation Overbridge, Road Development ,Udayanidhi Stall ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து...