×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை!

சென்னை : சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதேபோல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,720க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலையானது ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,590க்கும் விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.75.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.76-க்கும் விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...