×

சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 11 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 9 வழக்குகள் பதிவு செய்து, 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்கவும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையாளர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனைக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று (19.07.2023) போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்கவும் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சென்னையில் நேற்று (19.07.2023) தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7.6 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Triplican) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று (19.07.2023) மூர் மார்கெட் அருகே ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தஹிருல், வ/35, த/பெ.பதருதீன், மேற்கு வங்காளம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்றைய (19.07.2023) சிறப்பு தணிக்கையின்போது, 437 கஞ்சா வழக்கு குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்து, மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடாத வண்ணம் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் நேற்று (19.07.2023) நடைபெற்ற சிறப்பு சோதனையில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த குற்றத்திற்காக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு 1 குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.1,940 பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 11 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...