திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், கோமாளி அருகே ரயில்வே சிக்னல் ஒயரை நேற்று அதிகாலை ெகாள்ளை கும்பல் துண்டித்துள்ளது. அப்போது மும்பையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நின்றது. இதை பயன்படுத்திக்கொண்ட கொள்ளை கும்பல், ரயிலில் எஸ்1 மற்றும் எஸ்2 பெட்டிகளில் ஏறினர். அதில் விசாலாட்சி என்பவரிடம் 4 சவரன் நகை மற்றும் சக பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பயணிகள், கடப்பா ரயில்வே போலீசில் புகார் செய்தனர்.
The post சென்னை ரயிலில் பயணிகளிடம் கத்தியை காட்டி நகை கொள்ளை appeared first on Dinakaran.
