×

சென்னையில் 16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: சென்னையில் 16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக தேர்வு மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மறுதேர்வு கோரி 16 பேர் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என நீதிபதிகள் தெரிவித்ததுடன். நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.

The post சென்னையில் 16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,iCourt Scheme ,Chennai High Court ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்