×

5 நாட்களுக்கு பிறகு இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம்

காசா சிட்டி: 5 நாள் தொடர் மோதல்களுக்கு பிறகு பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. 1967ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்குப் போரில் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம், காசா உள்ளிட்ட பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது முதல் பாலஸ்தீனியத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாத குழுவின் தலைவர் காதர் அட்னான் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான பொய்க்குற்றச்சாட்டை கண்டித்து 3 மாதங்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த காதர் அட்னான் கடந்த 2ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து காசாவில் இருந்து செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாத குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் மே 2ம் தேதி முதல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தளபதிகள் கலீலி பாட்டினி, தாரிக் இசெல்தீன், ஜிகாத் கனாம், இயாத் அல் உள்பட 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த இஸ்லாமிய ஜிகாத் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 5 நாட்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 5 நாட்களுக்கு பிறகு இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Palestine ,Gaza City ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன நார்வே, ஸ்பெயின்