×

காவிரி நீர் தொடர்பாக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு..!!

டெல்லி: காவிரி நீர் தொடர்பாக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார். தண்ணீர் இன்றி பயிர் கருகுவதால் கர்நாடக அரசு காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருக்கிறது. இடையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஜூன், ஜூலை வரை தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டிய 28.8 டிஎம்சி நீரை திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்குன்டான 45 டிஎம்சி நீரை இம்மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பட்டியலில் இணைக்கப்படாமல் முறையீட்டை எவ்வாறு ஏற்பது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

The post காவிரி நீர் தொடர்பாக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Caviri Water Delhi ,Kaviri water ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...