×

டிஎன்பிஎஸ்சி சார்பில் நடந்த ஆராய்ச்சி உதவியாளர் பணி தேர்வை 2,370 பேர் எழுதினர்

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் நடந்த 6 சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வை 2,370 பேர் நேற்று எழுதினர். சார்நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 26ம் தேதி அறிவித்தது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த தேர்வில் பங்கேற்க 2,370 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு நேற்று தேர்வுகள் நடந்தது.

இன்றும் தேர்வு நடைபெற உள்ளது. நேற்று நடந்த தேர்வில் முதுகலை பட்டத்துக்கு தரநிலையில் கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களின் அடிப்படையிலான முதல் தாள், 2வது தாளில் தமிழ் தகுதி மற்றும் பொது ஆய்வுகள் அடிப்படையிலான 2ம் தாள் என இரண்டு எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடக்கிறது. சென்னையில் 3 மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

The post டிஎன்பிஎஸ்சி சார்பில் நடந்த ஆராய்ச்சி உதவியாளர் பணி தேர்வை 2,370 பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,
× RELATED 6,244 பதவிக்கு 15.91 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு