×
Saravana Stores

வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை தரும் பட்ஜெட்: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

சென்னை: வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை தரும் பட்ஜெட் என ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடிக்கும். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை குறிப்பாகப் பாராட்டுகிறோம்.

2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை தரும் பட்ஜெட்: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Chennai ,
× RELATED ஆளுநர் ரவி கூறுவது வடிகட்டிய பொய்: முத்தரசன் விமர்சனம்