தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவும், பாஜவும் தனி, தனி கூட்டணியில் போட்டியிடுகின்றன. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே கள்ளக்கூட்டணி உள்ளது என அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தேர்தலுக்கு பின்னர் அவர்கள் சேர்ந்து கொள்வார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனை உண்மையாக்கும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக எடப்பாடி பழனிசாமியும் இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல் மழுப்பலான அரசியல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை சட்டமன்ற தொதிக்கு உட்பட்ட கோவை தெற்கு, சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலையும், எடப்பாடியும் கையில் துண்டை போட்டு குலுக்குவது போல் அச்சிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘அடிச்சாலும், புடிச்சாலும் அண்ணன், தம்பி நீயும், நானும் தான்! தேர்தலுக்காக பிரிவது போல நடித்து அதிமுக வாக்குகளை பாஜவுக்கு மடைமாற்றும் வியூகம், சபாஷ்!’ என அச்சிடப்பட்டு இருந்தது. தற்போது இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், பலரும் தங்களது பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவு செய்து பாஜ, அதிமுகவை கிழித்தெடுத்து வருகின்றனர். இதற்கிடைடே போஸ்டர்களை போலீசார் கிழித்து அகற்றினர்.
The post அடிச்சாலும், புடிச்சாலும் நீயும், நானும் அண்ணன், தம்பி: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் appeared first on Dinakaran.