பிஎம்டபிள்யூ நிறுவனம், இரண்டாம் தலைமுறைக்கான எம்2 என்ற புதிய காரினை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3.0 லிட்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 460 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மணிக்கு 100 கி.மீ வேகத்தை 4.1 நொடிகளில் எட்டும்.
அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை செல்லலாம். இதில் 14.9 அங்குலம் கொண்ட வளைவான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளது. அடாப்டிவ் எல்இடி ஹெட்லாம்ப்கள், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
The post பிஎம்டபிள்யூ எம்2 appeared first on Dinakaran.