×

பிஇ விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்


சென்னை: பிஇ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பி.பிளான் ஆகிய படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்துக்கு அதிமான இன்ஜினியரிங் படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார்.

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.அதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புதல் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றுதல். இந்த செயல்முறையில் சீரற்ற எண்கள் ஒதுக்கீடு, ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். மேலும்பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்படும், இதில் தேர்வு நிரப்புதல், இருக்கை ஒதுக்கீடு மற்றும் இருக்கை உறுதிப்படுத்தல் ஆகியவை அடங்கும், ஒதுக்கப்பட்ட கல்லூரியில் புகாரளித்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

The post பிஇ விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna University ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...