×

குளித்தலை பேருந்துகளில் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்

*போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

குளித்தலை : குளித்தலை நகரப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை போக்குவரத்து போலீசார் கண்டிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து நச்சலூர், ஆலத்தூர், குழுமணி, இன்னுங்கூர், புதுப்பட்டி, பேரூர், பணிக்கம்பட்டி, தோகைமலை, கள்ளை, பஞ்சப்பட்டி, கொசூர், காணியாலம்பட்டி, மாயனூர், பழைய ஜெயங்கொண்டம், புணவாசிப்பட்டி, முசிறி உள்ளிட்ட பகுதிகளுக்கு குளித்தலை பேருந்து நிலையத்திலிருந்து காலை முதல் மாலை வரை நகரப் பேருந்துகள் சென்று வருகின்றன.

இதில் குளித்தல வரை உள்ள அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் நின்று பயணிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகளை காலை மாலை வேலைகளில் ஏற்றிச் செல்வது வழக்கம்.
இதனால் ஒரு சில நேரங்களில் நகரப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மாலை பள்ளி நேரங்களில் இளம் வாலிபர்கள் மாணவர்கள் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடியே படியில் பயணம் செய்கின்றனர்.

சமீபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் கீழே பேருந்தின் முன் படிக்கட்டில் விழுந்து பின் சக்கரத்தில் மாற்றியதில் கை கால்கள் மேல் சக்கரம் ஏறி பெரிதும் காய்மடைந்தார்.
இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க வேண்டும். இனி வரும் காலங்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குளித்தலை பேருந்துகளில் படியில் பயணம் செய்யும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kulutlai ,Kulithalai ,
× RELATED எம்எல்ஏ வழங்கினார் காலை 9 மணி முதல்...