- வங்கம்
- கொல்கத்தா
- அன்வர் அசிம் அனார்
- வங்காளம்
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- அக்த்ருஷ்ஜமான்
- ஐக்கிய மாநிலங்கள்
கொல்கத்தா: வங்கதேசத்தை சேர்ந்த எம்பி அன்வருல் அஜிம் அனார், மருத்துவ சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வந்த நிலையில் மாயமானார். அமெரிக்காவில் வசிக்கும் அவர் நண்பர் அக்தருஷ்ஜமான் ஏற்பாட்டின்படி கூலிப்படை மூலம் எம்பி கொலை செய்யப்பட்ட விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதன்படி, கொலையின் முக்கிய குற்றவாளியான முகமது ஷியாம் ஹூசேன் நேபாள போலீசாரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கொலையான எம்பி உடல் இன்னும் கிடைக்கவில்லை. அவரது உடலை கொலையாளிகள் துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரிக்கும் நிலையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் கால்வாயில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மே 12ம் தேதி கொலையான எம்பி கடைசியாக தென்பட்ட நியூ டவுன் பகுதியின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு செப்டிக் டேங்கில் இருந்து 3.5 கிலோ மனித சதையை போலீசார் மீட்டுள்ளனர். இவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
The post வங்கதேச எம்பி கொலை மே. வங்கத்தில் கால்வாயில் இருந்து மனித எலும்பு மீட்பு appeared first on Dinakaran.