×

வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு

டெல்லி: வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. எல்லை பாதுகாப்பு தொடர்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கு மேல் நடந்து அது வன்முறையாக வெடித்த நிலையில் 4 முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். வங்கதேசத்தில் ஒரு மாதமாக போராட்டம் நீடித்து வந்த நிலையில் நேற்று வன்முறையாக மாறியது.

வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசாங்கம் தெரிவித்தது. இதையடுத்து மாணவர்கள் பிரதமரின் மாளிகையை சூறையாடுவது போன்றும் நாடாளுமன்றத்தை சூறையாடுவது போன்ற காட்சிகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அங்குள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறை குறித்தும், எல்லை பாதுகாப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

The post வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Bangladesh ,Delhi ,Indians ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...