×

பேட் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் ஜெஸிகா சாம்பியன்

பேட் ஹாம்பர்க்: பேட் ஹாம்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக்கை வீழ்த்தி, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜெர்மனியின் பேட் ஹாம்பர்க் நகரில், பேட் ஹாம்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளின் தொடர்ச்சியாக நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியை, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரை இறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜெஸிகா பெகுலா, இகா ஸ்வியடெக் மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட ஜெஸிகா பெகுலா, 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் இகாவை எளிதில் வீழ்த்தினார். அதையடுத்து அவருக்கு சாம்பியன் பட்டமும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற ஜெஸிகாவுக்கு ரூ. 1.42 கோடியும், 2ம் இடம் பிடித்த இகாவுக்கு, ரூ. 88 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

The post பேட் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் ஜெஸிகா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Bad Hamburg Open Tennis ,Jessica Champion ,Bad Hamburg ,Jessica Pegula ,Ika Swiatek ,Bad Hamburg Open Women's Tennis Singles ,Bad ,Hamburg, Germany ,Bad Hamburg Open… ,Dinakaran ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி