×

மோசமான வானிலையால் தூத்துக்குடி வந்த சென்னை விமானம் மதுரையில் தரையிறங்கியது

தூத்துக்குடி: சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் அவசர அவசரமாக மதுரையில் தரையிறங்கியது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து சுமார் 70 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காலை 7.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருவதாக இருந்தது. அந்த விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலுவும் பயணம் செய்தார்.

ஆனால் மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படாத நிலையில் மதுரையில் தரையிறங்கியது. இதையடுத்து கார் மூலம் அமைச்சர் வேலு தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். மேலும் பயணிகள் அனைவரும் கார் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். இதனால் காலை 7.45 மணிக்கு 68 பயணிகளுடன் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல இருந்த விமானம் சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக 11.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.

The post மோசமான வானிலையால் தூத்துக்குடி வந்த சென்னை விமானம் மதுரையில் தரையிறங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tuticorin ,Madurai ,Thoothukudi ,
× RELATED மோசமான வானிலை காரணமாக சென்னையில்...