×

விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை; மாணவர்களின் கல்விக்கடன் ரத்து.! 30 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும்

1 டிப்ளமோ அல்லது பட்டதாரிக்கு 25 வயதிற்குள் ஒரு வருட தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பயிற்சி வழங்கும் புதியஉத்தரவாத சட்டம் கொண்டு வரப்படும். பயிற்சியின் போது ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

2 அரசு போட்டித்தேர்வு கேள்வித்தாள் வெளியாவது தொடர்பான வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பண இழப்பீடு வழங்கப்படும்.

3 நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள கிட்டத்தட்ட 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்.

4 ஸ்டார்ட்-அப் நிதி திட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு நிதி வழங்கி சுயதொழில் செய்ய ஏற்பாடு வழங்கப்படும்.

5 2020 ஏப்ரல் 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் தகுதிப் பொதுத் தேர்வுகளை எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

6 அரசு வேலை, அரசு தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்.

7 2024 மார்ச் 15ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் வட்டியோடு தள்ளுபடி செய்யப்படும். வங்கிகளுக்கு இதற்கான இழப்பீட்டை அரசு வழங்கும்.

8 21 வயதிற்குட்பட்ட திறமையான மற்றும் வளரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

The post விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை; மாணவர்களின் கல்விக்கடன் ரத்து.! 30 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பெரும் பூநாரை (Greater Flamingo)