×

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலை: சென்னையில் அறிமுகம்

சென்னை: ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் தமிழகத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட `டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலை’ என்ற புதிய பெயின்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமித் சிங்கில் மற்றும் சின்னத்திரை நடிகைகள் கலந்துகொண்டு ‘டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலையை’ அறிமுகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் அமித் சிங்கில் பேசுகையில்,
‘டிராக்டர் எமல்ஷன் தற்போது உள்ள நவீனமயாமன வீடுகளுக்கு ஏற்ற ஒரு அற்புதமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் 4 ஆண்டு வாரன்டியுடன் இது செயல்படுகிறது. நுகர்வோர்களின் விருப்பத்தேர்வுகள், உள்ளூர் மக்களின் கலாச்சாரத்தில் கலந்து தற்போது ஏசியன் பெயின்ட்ஸ் நவீன வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்திற்காக வடிவமைக்கப்பட்ட டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலையையை போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அந்தந்த கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் பெயின்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறம் என்பது உணர்வுப்பூர்வமான ஒன்று. அதன்மூலமாகவே நாங்கள் மக்களுடன் பயணிக்கிறோம். மேலும் குறைந்த செலவில் அதிக ஆயுள் என்பதுதான் எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டர் எமல்ஷன் வர்ணமாலை: சென்னையில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Asian Paints' ,Chennai ,Asian Paints ,Tamil Nadu ,Managing Director ,CEO ,Amit… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்