×

பிரமிப்பூட்டும் 101.2 மீட்டர் உயரம்..1500 ஆண்டுகள் பழமை!: ஆசியாவிலேயே மிகவும் உயரமான மரம் சீனாவில் கண்டுபிடிப்பு..!!

பெய்ஜிங்: ஆசியாவிலேயே மிகவும் உயரமான மரம் தென்மேற்கு சீனாவின் ஸிஸாங் மாகாணத்தின் மலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகவும் உயரமான ஊசி இலை மர வகையான சிறு மரம் சீனாவின் தன்னாட்சி பிரதேசமான ஸிஸாங் மாகாணத்தின் இன்ஜி நகரில் உள்ள காப்புக் காட்டில் அமைந்துள்ளது. ஆனால் 84 மீட்டர் என்ற இதன் உயரத்தையும் விட மற்றொரு உயரமான மரம் இதே காப்புக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சைப்ரஸ் மரம் 101.2 மீட்டர் உயரம் உள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் இது சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அருகில் உள்ள பட்டுப்போன சைப்ரஸ் மரங்களின் அடிப்பாகத்தை ஆய்வு செய்தபோது அதில் 10 சென்டி மீட்டருக்குள் 50 வளையங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு வளையம் ஓராண்டு என்று கணக்கிட்டால் இந்த மரத்தின் வயது 1500 ஆண்டுகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த மரத்தை சுற்றியுள்ள மற்ற சைப்ரஸ் மரங்கள் 800 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் வரை பழமையானவையாகும். ஆசியாவின் மிகவும் உயரமான மரத்திற்கு கப்பரசஸ் டோருலோசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் சுற்றளவு 296 சென்டி மீட்டர். அதாவது ஒன்பதே முக்கால் அடியாகும்.

The post பிரமிப்பூட்டும் 101.2 மீட்டர் உயரம்..1500 ஆண்டுகள் பழமை!: ஆசியாவிலேயே மிகவும் உயரமான மரம் சீனாவில் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Asia ,China ,BEIJING ,southwest China's Xizong province ,
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு