×

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை!

கடலூர் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 4 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யா பன்னீர்செல்வம் மீது தற்போது புதிய வழக்கு பதிந்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துகிறது.

2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சத்யா கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாக வழக்கு போடப்பட்டது. பன்னீர்செல்வம் மீதான வழக்கின் அடிப்படையில் 2024 பிப்ரவரியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

2011 முதல் 2016ம் ஆண்டு வரை பன்னீர்செல்வம் பண்ரூட்டி நகர மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது டெண்டர் விடுவதில் முறைகேடு செய்து ரூ. 20 லட்சம் வரை பணமோசடி செய்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர். இந்த சொத்துக்குவிப்பு மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MLA ,Anti-Corruption Department ,Cuddalore Panruti ,Sathya Panneerselvam ,Dinakaran ,
× RELATED 1996ல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம்...