×

ஆந்திர முதல்வர் குறித்து அவதூறு; டைரக்டர் ராம்கோபால் வர்மா கைது செய்யப்படுவாரா?: நாளை ஐகோர்ட்டில் விசாரணை

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் குறித்து அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட டைரக்டர் ராம்கோபால் வர்மாவை போலீசார் தேடி வரும் நிலையில், முன்ஜாமீன் கோரிய மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டார். இதுதொடர்பாக அனந்தபூர், குண்டூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

மேலும் அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாக இருந்தார். ராம்கோபால் வர்மா தனது வழக்கறிஞர் மூலம் ஆன்லைனில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தெரிவித்தார். முன்ஜாமீன் கேட்டு ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை போலீசார் வெளியிட்டனர். இந்நிலையில் ராம் கோபால் வர்மா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று போலீசார் ராம்கோபால் வர்மாவை தேடினர். அவர் படப்பிடிப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் சென்றதாக அவரது வீட்டில் இருந்த ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

The post ஆந்திர முதல்வர் குறித்து அவதூறு; டைரக்டர் ராம்கோபால் வர்மா கைது செய்யப்படுவாரா?: நாளை ஐகோர்ட்டில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Andhra Chief Minister ,Ramgopal Verma ,Hyderabad ,Ram Gopal Verma ,Chandrababu Naidu ,Deputy Chief Minister ,Pawan Kalyan ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...