×

ஆந்திராவில் இருந்து வாங்கிவந்து சென்னையில் கஞ்சா ஆயில் விற்பனை: 7 பேர் கைது; 21 கிலோ பறிமுதல்

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா மற்றும் விலை உயர்ந்த கஞ்சா ஆயில் பயன்படுத்தப்படுவதாக போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் வடிவுடையம்மன் கோவில் தெரு, மீனாட்சி தெரு சந்திப்பு பகுதியில் சோதனை நடத்தி 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 100 மில்லி கஞ்சா ஆயில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் வடிவுடையம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினேஷ் பாபு என்கின்ற பாபு (33), காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த சாய்சரண் (30), பாடி குமரன் நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (20) என்பது தெரியவந்தது. இதில் தினேஷ்பாபு ஜிம் மாஸ்டராக உள்ளார். சாய் சரண் இன்ஜினியராக உள்ளார். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணை நடத்தி திருவிக. தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாம் (27), பிரசன்னா (25), பெரியபாளையம் பகுதியை சேர்ந்த சுபின்ராஜ் (34) ஆகிய 4 பேரை கைது செய்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் ஆந்திராவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியிடம் கஞ்சாவை வாங்கிவந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, 100 மில்லி கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.

The post ஆந்திராவில் இருந்து வாங்கிவந்து சென்னையில் கஞ்சா ஆயில் விற்பனை: 7 பேர் கைது; 21 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Chennai ,Perambur ,Narcotics Intelligence Unit ,Kodunkaiyur ,Saravanan ,Kovil Street ,Kodunkaiyur M.R. Nagar ,Vadudayamman Kovil Street ,
× RELATED ஒடிசா, ஆந்திராவில் இருந்து கஞ்சா...