×

தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார் அமித் ஷா: திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி

சென்னை: அமைதியாக இருக்கும் மாநிலத்தில் கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார் அமித் ஷா என திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார் அமித் ஷா. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை விரும்பவில்லை அமித்ஷா. மதவாத பிளவை வேண்டுமென்று உருவாக்கி கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அமித்ஷா. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமித் ஷா பேசியுள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார் அமித் ஷா: திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Tamil Nadu ,DMK ,A.Raza ,Chennai ,Deputy General Secretary ,Minister ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...