திருமலை: அமராவதி உள்வட்ட சாலை ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் பெயரை சிஐடி போலீசார் சேர்த்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? என ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அமராவதி தலைநகரில் உள்வட்ட சாலை அமைத்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பெயரை முதல் குற்றவாளியாக சிஐடி போலீசார் சேர்த்துள்ளனர்.
ஏசிபி நீதிமன்றத்தில் லோகேஷ் பெயரை குறிப்பிட்டு சிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணா மற்றும் சிலர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்கு காரணமாக அடுத்ததாக நாரா லோகேஷ் கைது செய்யப்படுவாரா? என்பதும் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் நாரா லோகேஷ் நேற்று சந்தித்தார். தனது தந்தை மீது ஆந்திரா அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.
The post அமராவதி சாலை ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கைது? appeared first on Dinakaran.