சென்னை: கலைஞர் ஆட்சியில் பட்டியலின பிரிவில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு எந்த சட்டத்தையும் முழு ஆய்வுக்கு பிறகே நிறைவேற்றுகிறது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உறுதியாகிறது. மக்களை திசை திருப்பும் நோக்கில் அவசர கோலத்தில் சட்டத்தை நிறைவேற்றிடும் பிறரை போல் திமுக அரசு செயல்படுவதில்லை. திமுக அரசின் சட்டம் எப்போதும் வெற்றியை மட்டுமே பெற்று வருவது வரலாறாகி வருகிறது என முதல்வர் கூறியுள்ளார்.
The post பட்டியலின உள் ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு appeared first on Dinakaran.