×

அல்ஜீரியாவில் காட்டுத்தீ: 10 வீரர்கள் உட்பட 34 பேர் கருகி பலி

அல்ஜியர்ஸ்: வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில், பெஜாயா, ஜிஜெல் மற்றும் பவுரா உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான வெயிலால் கடந்த ஞாயிறு அன்று வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. வெயிலுடன் பலமான காற்று வீசியதால் தீ வேகமாக பரவியது. இதில், தலைநகர் அல்ஜியர்சின் கிழக்கில் உள்ள பெனி கேசிலா பகுதியில் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் 10 பேர் உடல் கருகி இறந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் 24 பேர் பலியாகி உள்ளனர். 8,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 16 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பரவிய தீயை கட்டுப்படுத்த 7,500 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 350 வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

The post அல்ஜீரியாவில் காட்டுத்தீ: 10 வீரர்கள் உட்பட 34 பேர் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Forest fire in ,Algeria ,Algiers ,Bejaya ,Gijel ,Paura ,fire ,Dinakaran ,
× RELATED வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகள்...