×

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. உட்கட்சி விவகாரம் பற்றி விசாரிக்க அதிகார வரம்பு உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,iCourt ,Chennai ,Election Commission ,Supreme Court ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!