×

அதிமுக ஆட்சியில் 2019-2021 வரை நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் நடந்த முறைகேடு: சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் அமல்படுத்திய இ-டெண்டர் முறையில் வெளிப்படை தன்மை இல்லை என்று சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் ஒரே ஐ.பி முகவரியில் இருந்து பெறப்பட்டதாகவும், அதிகாரிகள் கணினியிலேயே டெண்டர் கோரிய ஒப்பந்ததாரர்கள் தொடர்பாகவும் சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகளில் இருந்து ஒப்பந்ததாரர்கள் தாக்கல் செய்த 289 டெண்டர்களில் 71 டெண்டர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை கணினி மூலம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்ததன் மூலம் ஒப்பந்த புள்ளிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தனது அறிக்கையில்தெரிவித்திருக்கிறது . 2019-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையின் தாராபுரம் கோட்டத்தில் கோரப்பட்ட டெண்டருக்கு 3 ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள். 3 பேரும் ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து வெவ்வேறு விலையை குறிப்பிட்டு டெண்டர் தாக்கல் செய்திருக்கிறார்கள். கங்கனம், செண்பகம், சபரி கட்டுமான நிறுவனங்கள் ஒரே ஐ.பி. முகவரி மூலம் 14 டெண்டர்களில் பங்கேற்றனர். ரூ.32.5 கோடி மதிப்புள்ள 14 பணிகளில் செண்பகம் கட்டுமான நிறுவனத்துக்கு மட்டும் 12 பணிகள் ஒதுக்கப்பட்டன.

அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டதும் சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமானது. ஒப்பந்ததாரர்கள் எழில்மாறன், எஸ்.குணசேகரன், செல்வம், ஹரிவே லைன்ஸ் நிறுவனம் இணைந்து 63 பணிக்கு அனைத்து டெண்டர்களையும் தாக்கல் செய்துள்ளது. 63 பணிகளில் ரூ.175.57 கோடி மதிப்பிலான 45 பணிகள் இந்த 3 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சில ஒப்பந்ததாரர்கள் வெவ்வேறு பெயரில் நிறுவனம் தொடங்கி மற்றவர்கள் ஏலத்தில் பங்கேற்காத வகையில் டெண்டர் தாக்கல் செய்தது அம்பலமாகியுள்ளது.

திருமங்கலம் உபகோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.21 கோடி பணிகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்யாதுரை நிறுவனங்களுக்கு 2020-ல் வழங்கிய 3 பணி ஒப்பந்தங்கள் மதிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று சி.ஏ.ஜி. குற்றச்சாட்டியுள்ளது.

The post அதிமுக ஆட்சியில் 2019-2021 வரை நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் நடந்த முறைகேடு: சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CAG ,Chennai ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்