×

காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11.15 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் 2.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10,000/-, கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகளை வழங்கினார்.

The post காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kanchi Ekambaranathar ,Chief Minister ,Chennai ,Kanchipuram Ekambaranathar Matriculation Higher Secondary School ,Hindu Religious Endowments Department ,Anjugam Primary School ,Choolaimedu ,Kanchi Ekambaranathar Mainilaipalli ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...