×

பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்வினுக்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!!

சென்னை: பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்வினுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்!

இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு வாழ்த்துகள்!

விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

 

The post பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்வினுக்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadas ,Ajit ,Chennai ,Pamaka ,President ,Ajit Kumar ,Padmasri Aswin ,Dinakaran ,
× RELATED கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்;...