×

தொழிலாளி வீட்டில் ஏசி வெடித்து பொருட்கள் சேதம்

சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளையை சேர்ந்தவர் ரவி(53). இவர், இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேங்காய் வெட்டும் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இவரது வீட்டில் ஏசி போட்டு தூங்கி உள்ளனர்.

நேற்று காலை ஏசியை ஆப் செய்துவிட்டு அனைவரும் எழுந்து விட்ட நிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறியது. அப்போது வீட்டினுள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஏசி வெடித்ததில் கட்டிலின் மேலிருந்த மெத்தை முழுவதுமாக எரிந்து வீடு முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 2 மெத்தைகள், டிவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. 10 ஆண்டுகளுக்கு முன்புள்ள ஏசி என்பதால் பராமரிப்பு இல்லாமல் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

The post தொழிலாளி வீட்டில் ஏசி வெடித்து பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Sathankulam ,Ravi ,Arasur Panaivilai ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...