×

காட்டுமலையானூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

வேட்டவலம், டிச.3: வேட்டவலம் அடுத்த காட்டுமலையானூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய நிவர் புயல் நிவாரண கால்நடை மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாயகி அருணாசலம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராணி ராஜாராம் முன்னிலை வகித்தார். தனியார் அறக்கட்டளை திட்ட மேலாளர் ஜெயகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் கால்நடை மருத்துவர்கள் ராஜ்குமார், ஆனந்தன் தலைமையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுப்பிரமணியன், செயற்கை முறை கருவூட்டாளர்கள் சுரேஷ், சிவானந்தம் ஆகியோர் 400க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அடைப்பான் நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

Tags : Veterinary Camp ,Kattumalayanur Panchayat ,
× RELATED கணவன் ேபாலீசில் சரண் காடுவெட்டி குரு...