×

கீழ்பவானி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து

கோபி,டிச.3: கோவை மாவட்டம் சோமனூரை  சேர்ந்தவர் கவுதம்கார்த்திக், தொழிலதிபர். இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது  நண்பர் கோபால கிருஷ்ணன் என்பவரும் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில்  உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கார் நம்பியூர் அருகே உள்ள  மூனாம்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த கீழ்பவானி வாய்க்காலில் கவிழ்ந்தது.

  இது குறித்து  தகவல் அறிந்த நம்பியூர் தீயணைப்புத்துறையினர் சம்பவயிடத்துக்கு சென்று  காருக்குள் இருந்த கவுதம்கார்த்திக், கோபாலகிருஷ்ணன்  ஆகிய 2பேரை பத்திரமாக மீட்டனர்.  பின்னர் சுமார் 4 மணி நேரம் போராடி வாய்க்காலில் இருந்து காரை பத்திரமாக மீட்டனர். காயமடைந்த  2 பேரும் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Kizhpavani ,canal ,
× RELATED பைக்குகள் மீது கார் மோதி பெண் உட்பட 4 பேர் பலி