×

ராமநாதபுரத்தில் பி.டி.ஓ.வை தாக்க முயன்ற பா.ஜ.வினரை கைது செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,  டிச. 2: ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முற்பட்ட பா.ஜ.வினரை கைது செய்யக்கோரி ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டார  வளர்ச்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.வினர் வைத்தனர். இதனை அலுவலகத்தில் இருந்து அகற்றினர். இதைத்தொடர்ந்து நேற்று  முன்தினம் பா.ஜ.வினர் வட்டார  வளர்ச்சி அலுவலகத்திற்கு பூட்ட முற்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க  முயன்றனர். இதைக்கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்க வட்டார தலைவி பூங்கொடி தலைமை  தாங்கினார். இதில், ஊராட்சி ஒன்றியத்தில் அராஜகப் போக்கில் ஈடுபட்ட பா.ஜ.வினரை கைது செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பினை அரசு வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags : arrest ,Ramanathapuram ,BJP ,PDO ,
× RELATED ராமநாதபுரத்தில் களைகட்டும் போலி...