×

புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் இடைத்தரகரால் சீரழிப்பு கவர்னர் கிரண்பேடி ஆவேசம்

புதுச்சேரி,  டிச. 2: புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு இடங்கள்  இடைத்தரகரால் சீரழிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி குற்றம்  சாட்டியுள்ளார். புதுச்சேரியில் மொத்தம் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. அதில்  மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசின் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி  தவிர்த்து மீதமுள்ள 7ம்  தனியார் மருத்துவ கல்லூரிகள். இதில் 3 தனியார் சுயநிதி  மருத்துவக்கல்லூரிகளும், 4 நிகர்நிலை மருத்துவக்கல்லூரிகளும் அடங்கும்.  முக்கியமாக தனியார் நிகர் நிலை மருத்துவக்கல்லூரிகள் ஒரு இடம்கூட  புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்வதில்லை. இதற்கிடையே மத்திய அரசின் 2019  மருத்துவ ஆணையம் சட்ட மசோதாவை அமல்
படுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் 50 சதவீத  இடங்களை பெறுவதற்கான சட்ட முன்வரைவு  மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்டாக் மாணவர்- பெற்றோர் நலச்சங்கம் மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பிரச்னையில், முடிவு வரும் வரை கலந்தாய்வை நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.  இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி நேற்று சமூக வலைதளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகள்  ஆரம்பிக்கும்போது 50 சதவீத இடங்களை அரசுக்கு தருவதாக வாக்குறுதி அளித்து  சான்றிதழ் பெற்றுள்ளனர். இதில் மீதமுள்ள 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக  எடுத்துக் கொள்ள வேண்டும். இடைப்பட்ட ஆண்டுகளில் இடைத்தரகரால், இந்த நடைமுறை சீரழிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான உத்தரவு அவசியம் என  குறிப்பிட்டுள்ளார்.

Tags : Government ,colleges ,Puducherry ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...