×

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,டிச.1:மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரு ம்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அ னைத்துவிவசாயிகள் சங் கங்கள், அனைத்து தொழி ற் சங்கங்கள் ஆகியவற்றி ன் சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மத்தியஅரசு வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்து விவசாயிகள் சங்கங்கள்,அனைத்துத் தொழிற்சங்கங்கள் இணைந்து பெரம்பலூர் புதுபஸ்டாண்டு முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச்செயலாளர் ராஜேந்தி ரன், ஏஐடியூசி மாவட்டத்தலைவர் ஞானசேகரன், சிஐடியூ மாவட்டத் தலைவர் அகஸ்டின், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட துணைச்செயலாளர்கள் ரங்கநாதன், ரங்கராஜ், திக நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், காங்கிரஸ் மாநிலநிர்வாகி சிவாஜிமூக்கன், விசிக மாநில நிர்வாகி வீர செங்கோலன் மற்றும் விவசாயிகள் சங்க, தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்ற விவசாயிகள் மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களைத் திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து கட் சியினரையும் அழைத்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமி ழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் திருத்த சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

Tags : Demonstration ,trade unions ,Delhi ,
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு டெல்லி...