×

பொதுமக்களுக்கு அழைப்பு பாடாலூர் அருகே விவசாய நிலத்தில் வைத்திருந்த 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பாடாலூர், டிச. 1: ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் ராஜேந்திரன். விவசாயியான இவருக்கு கூத்தனூர் கிராமத்தில் இருந்து பாடாலூர் செல்லும் குறுக்குவழி சாலையில் விவசாய நிலம் உள்ளது. இவர் தனது நிலத்தில் திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு விற்பனை செய்ய அனுப்புவதற்காக 20 மூட்டை சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்திருந்தார். அந்த வெங்காயத்தில் 50 கிலோ எடை கொண்ட 4 மூட்டைகளை (200 கிலோ) நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திருடி சென்றனர். நேற்று காலை விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தபோது சின்ன வெங்காயம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். திருட்டுபோன சின்ன வெங்காயத்தின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து விவசாய நிலங்களில் பட்டறை அமைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இதனால் சின்ன வெங்காயம் பட்டறை வைத்துள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : theft ,land ,Badalur ,
× RELATED பைக் திருட்டு