×

வட்ட வழங்கல் ஆபிசில் விஜிலென்ஸ் ரெய்டு

கிருஷ்ணகிரி, டிச.1: கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதில் கணக்கில் வராத தொகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடித்து கொண்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் தாலுகா அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Circular Distribution Office ,
× RELATED மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில்...